தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் முகாம்

சுயதொழில் புரிய விருப்பமுள்ளவர்களுக்கான விழிப்புணர்வு முகாமினை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 21 ஆம் முதல் 23 ஆம் தேதி வரை நடத்த உள்ளது. இதில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் பெயர் மற்றும் பயிற்சி தேதி:

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் கீழ்கண்ட பயிற்சிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது

  • உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி தேதி 21.02.2024 முதல் 23.02.2024 வரை காலை 9:30 மணி முதல் 5 மணி வரை.
  • தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அழகு கலை பயிற்சி பியூட்டிஷியன் மேக்கப் 21.02.2024 முதல் 23.02.2024 வரை காலை 9:30 மணி முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

வயது வரம்பு

  • பயிற்சியில் ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தகுதி பெற்ற ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்,பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகைகளில் தங்கும் விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடம்

சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் 21.02.2024 முதல் 23.02.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

 

Website Link

 

 

Leave a Comment