சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவு தினத்தில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு இணைந்து இலவச தையல் இயந்திரங்களை சமூக நல துறை வாயிலாக வழங்கி வருகிறது. இது ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மனைவிகள், மாற்றுத்திறனாளி ஆண்கள்,சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில்  அரசு வழங்கி வருகிறது.

விண்ணப்பிக்க தகுதி

  • இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் போது 20- 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

  • ஆதரவற்றோர்/கைவிடப்பட்ட பெண்கள்/ விதவை/ மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்
  • குடும்ப வருமானச் சான்றிதழ்
  • ஆறு மாத தையல் பயிற்சி முடித்த சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • விண்ணப்பதாரர் புகைப்படம்
  • ஆதார் எண்

 

Application Link :

CLICK HERE

Leave a Comment