குடும்ப தலைவிக்கு மாதம் ரூ-1000| வழிகாட்டு நெறிமுறை வெளியீடு 2023

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ-1000.  கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

TNUHDB Recruitment 2023

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் கீழ்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.

  • ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  • குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
  • ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில்வரி செலுத்துவோர்,
  • மாநில ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளில் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்,
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களை தவிர) அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
  • சொந்த பயன்பாட்டுக்கு காஜி டிராக்டர் கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
  • ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வ விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
  • ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் விதவை ஓய்வூதியம் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஒப்புதல் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெரும் குடும்பங்கள்

பொருளாதாரத் தகுதிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்காணும் மூன்று பொருளாதாரம் அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

  • ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு கீழ் வருமானம் ஈடும் குடும்பங்கள்
  • ஐந்து ஏக்கருக்கு குறைவாக நான் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்
  • ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டு இருக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்

APPLICATION PDF LINK : Click here

Leave a Comment