முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – அரசாணை வெளியீடு

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை | முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்| வேலை வாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமை பட்டதாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல்| முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்| ஆணைகள் |முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் காண வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Forest Dept Jobs

 

மனிதவள மேலாண்மை துறையின் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை தொடர்பான உரையின் போது மாண்புமிகு அமைச்சர் நிதி மனிதவள மேலாண்மை அவர்களால் வேலை வாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது

  • கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்
  • முதல் தலைமுறை பட்டதாரிகள்
  • தமிழக அரசு பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்

வேலை வாய்ப்புகள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்

  • ஒரு குடும்பத்தில் கல்வி கட்டண சலுகை என பயன்படுத்தி முதலில் பட்டப் படிப்பில் சேருபவரை X என்றும் அதே குடும்பத்தில் கல்வி கட்டண சலுகை இல்லாமல் இரண்டாவதாக பட்டப்படிப்பில் சேர்ப்பவரை Y என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
  • கல்வி கட்டண சலுகைகளை பயன்படுத்தி x என்பவர் பட்டப்படிப்பில் சேர்ந்து அவர் பட்டப்படிப்பினை முடிக்கவில்லை அடுத்த நபர் Y கல்வி கட்டண சலுகை இல்லை என்றாலும் அவர் முதலில் பட்டப் படிப்பினை முடித்து விடுகிறார் எனில் Y என்பவருக்கு First Graduate Certificate வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம்.
  • X முதலில் கட்டண சலுகை பெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து Y பின்னர் பட்டதாரி ஆகிறார் என்றால், First Graduate Certificate Y என்பவருக்கு வழங்கலாம்.
  • X முதலில் கல்வி கட்டண சலுகைகளை பயன்படுத்தி நான்கு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி மருத்துவ படிப்பில் சேர்கிறார். Y அடுத்த ஆண்டில் மூன்று வருட பட்டப்படிப்பில் சேர்ந்து X க்கு முன்னரே பட்டதாரி ஆகிறார் எனில் யாருக்கு First Graduate Certificate வழங்கப்பட வேண்டும்.
  • X அல்லது Y இதில் யார் முதலில் பட்டப்படிப்பு முடித்தவரோ அவருக்கு வழங்கலாம்.
  • X மற்றும் Y இருவரும் ஒரே ஆண்டில் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் தேர்ச்சி அடைந்த மாதத்தை கணக்கில் கொண்டு முதலில் முடித்தவருக்கு வழங்கலாம்.
  • X மற்றும் Y இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் எக்ஸ்க்கு வழங்கலாம்.
  • X முதலில் பட்டப்படிப்பில் சேர்ந்து பட்டதாரி ஆவதற்கு முன்னரே அல்லது பட்டதாரி ஆகி ஃபர்ஸ்ட் பிராஜெக்ட் சர்டிபிகேட் பெற்று வேலையில் சேர்வதற்கு முன்னரோ துரதிஷ்டவசமாக இறந்து விடுகிறார் என பின்னல் பட்டதாரியான ஒய்க்கு ஃபர்ஸ்ட் பிராஜெக்ட் சர்டிபிகேட் வழங்க பரிசீலனை செய்யலாம்.
  • அண்ணன் தம்பிகள் அவர்களுடைய மனைவி மகன் மகள் ஆகியோருடன் இணைந்து ஒரு கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பு முடித்தவருக்கு மட்டும் First Graduate Certificate  வழங்கலாம்
  • ஒருவருக்கு First Graduate Certificate வழங்குவது தொடர்பாக அதே குடும்பத்தில் மற்றொருவர் ஆட்சியபனை செய்தாலோ அல்லது நீதிமன்றத்தின் நாடினாலோ அத்தகைய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை என First Graduate Certificate சலுகைகளை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளார் என்ற விவரத்தினை பராமரிப்பது எவ்வாறு பொதுவாகச் சான்றிதழ் வழங்கும்போது விண்ணப்பிக்கும் நபர் அளிக்கும் சப்போர்ட்டிங் டாக்குமெண்ட்ஸ் ஆய்வு செய்து சரியானது என உறுதி செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது இந்நிலையில் விண்ணப்பிக்கும் நபர் சலுகை ஏற்கனவே குடும்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தினை தெரிவிக்காது அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறையினர் மீண்டும் இச்சலுகையை பயன்படுத்த முனையும் பட்சத்தில் அவர்களது முன்னோர்கள் சலுகைகளை பயன்படுத்த முடியும் பட்சத்தில் அவர்களது முன்னோர்கள் ஏற்கனவே சலுகைகளை பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக கண்டறிய மாணவர்கள் பட்டப்படிப்பு சேர்க்கையின் பொழுது கல்வி கட்டண சலுகை பெற முதல் பட்டதாரி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொழுது பின்பற்றப்பட்ட வரும் நடைமுறையினையே இதற்கும் பின்பற்றலாம்.
  • ஒருவர் ஃபர்ஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர் 10+2 என்ற வகையில் பின்வரும் முறைகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 இல் பிரிவு 25ல் பட்டங்கள் பட்டயங்கள் முதுகலை பட்டங்களை பொதுப்பணிகளுக்கு அங்கீகரிப்பது தொடர்பாக நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளது அதன்படி பள்ளி இறுதி தேர்வு மற்றும் பள்ளி மேல்நிலை கல்வி தேர்வு தேர்ச்சி பெற்ற பின்னர் பல்கலைக்கழகம் மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கும் பட்டங்கள் பட்டயங்கள் மட்டுமே பொதுப்பணிகளில் வேலை வாய்ப்பிற்கும் பதவி உயர்வுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனவே இதனை கருத்தில் கொண்டு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்
  • முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.
  • முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வரையறை கிடையாது மேலும் எந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் முதல் தலைமுறை பட்டதாரி ஆக இருக்கும் பட்சத்தில் இச்சான்றிதழ் பெற தகுதி உடையவராக தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி கல்வி பயின்று முதல் தலைமுறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர் கீழ்காணும் நிபந்தனைகள் பெற்றெடுக்க வேண்டும்.
  • பள்ளி இறுதித் தேர்வு மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி தேர்வு ஆகியவர்களை தேர்ச்சி பெற்ற பின் தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் வழியாக பெறப்படும் பட்ட பெறப்படும் பட்டயம் பட்டம் முதுகலை பட்டங்களை மற்றும் பொதுப்பணிகளில் நியமனத்திற்கும் பதவி உயர்வைக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்.
  • குழந்தைகளாக பிறக்கும் இரட்டையர்கள் வளர்ந்த பிறகு முதல் தலைமுறை பட்டதாரி சலுகை அரசு கடிதம் எண் 315 உயர்கல்வித்துறை நாள் 13 11 2017 in படி பட்டதாரி இல்லாத குடும்பத்தில் முதல் பட்டதாரி சலுகை கூறும் முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம்.
முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்குவதற்கான பிற நடைமுறைகள்:
  • மனுதாரர் தான் வசித்துவரும் இருப்பிடத்திற்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் பொது இ சேவை மையத்தின் மூலம்  முதல் தலைமுறை பட்டதாரி சான்று விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் தலைமுறை பட்டதாரி சான்று விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:
  •  அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற் கல்லூரிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரிகளை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சார்ந்த முதல் பட்டதாரி மாணவ மாணவியர்.
  • வேலை வாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முன்னுரிமை பெறுவர்
  • முதல் பட்டதாரி சான்று பெற குடும்ப நபர்கள் என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள தந்தை தாய் அவர்களின் பெற்றோர் மற்றும் மாணவன் மாணவியல் உடன்பிறப்புகளை குறிக்கும் .
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்வர்கள்:
  •  புகைப்படம்
  • முகவரிக்கான சான்று
  • மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ் /வேலைவாய்ப்பு அட்டை/ கல்வி கட்டண சலுகைக்காக வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிப்போர்/ விண்ணப்பிப்பவர்கள்
  • மனுதாரர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி படிவம்
  • பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • மனுதாரரின் கல்வி சான்றிதழ்கள்

முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்கும் நடைமுறை:

  • மனுதாரர் மேற்படி ஆவணங்களுடன் பொது இ சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் 

 

 Notification Link :

CLICK HERE

PB Notification ink :

Official Website Link :

CLICK HERE

Leave a Comment