யூடியூப் சேனல் நடத்த தமிழக அரசு இலவச டிரெய்னிங் :தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியில், இளைஞர்களுக்கு யூடியூப் சேனல் தொடங்கும் முறைகள், அதன் மூலம் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் கலையை கற்றுக்கொடுக்க இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, தொழில்முனைவோராக மாற வாய்ப்பு வழங்குகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள், குறிப்பாக யூடியூப், பல இளைஞர்களின் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் மேடையாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், யூடியூப் சேனல் தொடங்குவது, அதன் மூலம் எவ்வாறு தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது என்பதற்கான பயிற்சியை வழங்கி வருகிறது.
யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி?
இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல். சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தகுதியும் வயது வரம்பும்:
- தகுதி: இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை:
மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க www.editn.in என்ற இணையதளத்தை அணுகவும். அலுவலக நேரங்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி விவரங்கள்:
இந்த பயிற்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது.
- நாள்: 05.03.2025 முதல் 07.03.2025 வரை
- நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை
முகவரி:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032
தொலைபேசி: 8668108141 / 8668102600 / 7010143022
முன்பதிவு அவசியம்: பதிவுக்கு இங்கு கிளிக் செய்யவும்
Leave a Comment