நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பொங்கல் அன்று அமல்:
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்பான ஆய்வை 70 நாட்களில் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு அடமான நகைகளை திரும்ப வழங்க,கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள்,தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கங்கள், தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்குகின்றன.அவற்றில், 5 சவரன் வரை பெற்ற நகை கடன்களை,தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்தது.நகை கடன் தள்ளுபடி!அறிவிப்பு வெளியானது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க- அ.தி.மு.க., சார்பில்,நகை கடன் தள்ளுபடி தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.இதனால், அந்த சலுகையை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றனர்.சிலர், வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றனர்.
இதையடுத்து, கூட்டுறவு சங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுமாறும், அந்த பணிகளை நவம்பர் 30க்குள் முடிக்கு மாறும் கூட்டுறவு துறை உத்தரவிட்டது.அவகாசம் முடிந்தும் ஆய்வு முடிவடையவில்லை. ஆனால், நகைகளை அடகு வைத்தவர்கள், தங்களின் நகைகளை திரும்ப வழங்கக்கோரி, கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றபடி உள்ளனர்.இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் நகை கடன் ஆய்வை முடிக்க, அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப்பட்டு உள்ளது. கடன்தள்ளுபடி சான்று மற்றும் அடகு வைத்த நகைகளை, பொங்கலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment