கலைஞர் கைவினைத் திட்டம் 2024: தமிழ்நாடு அரசு 11 டிசம்பர் 2024 அன்று “கலைஞர் கைவினைத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது, இது கைவினைஞர்களுக்கான புதிய கடனுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், 5% வட்டியுடன் ரூ.50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இதில், குடும்ப தொழில் அடிப்படை அல்லாமல், 25 வகையான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற முடியும்.இந்த திட்டத்தின் மூலம், கைவினைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கவும், தங்கள் தொழில்களை நவீனமாக மேம்படுத்தவும் உதவிக்கரமாக கடனுதவியும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
திட்டத்தின் செயல்பாடு:
மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி கலைவேலைபாடுகள், பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல் போன்ற 25 வகையான கைவினை தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படும்.இந்த திட்டத்தில், அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம். 25% மானியமாக ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது, மேலும் கடனுக்கு 5% வரை வட்டி மானியம் கிடைக்கும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவர்களே தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது??
விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
Leave a Comment