First Graduate Certificate Tamil

முதல் தலைமுறை பட்டதாரி சான்று : தமிழக அரசு மனித வள  மேலாண்மை துறையின் மூலம் அரசாணை (நிலை) 122 இன் படி நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களை ஏற்கனவே பின்பற்றப்படும் பணி முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்து கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டம் தெரிவிக்கப்பட்டது.

இதில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த இளைஞர்கள் அதற்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் வழியாகப் பெறலாம் மற்றும் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழை தொடர்புடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் வழியாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முதல் தலைமுறை பட்டதாரி சான்று மற்றும் அதற்குரிய வழிகாட்டு முறைகள் சரிவர  விவரிக்கப்படாத நிலையில் மாணவ மாணவிகள் இச்சான்றிதழை பெறுவதில் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் முதல் தலைமுறை பட்டதாரி சான்று விண்ணப்பிக்க இ- சேவை மையங்களில் வழிகாட்டுதல்கள் வரவில்லை மற்றும் மேல்நிலைக் கல்வி முடித்து உயர்கல்வி சேரும் மாணவ மாணவிகள் சலுகைகள் பெற விண்ணப்பிக்கும் முறை மட்டுமே நடைமுறையில் உள்ளது.

உயர்கல்விக்கு வழங்கப்படும் முதல் பட்டதாரி சான்றுக்கும் அரசு வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் முதல் பட்டதாரி சான்றுக்கும் உள்ள புரிதலும் தெளிவாக இல்லாததால் சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

அரசுத் துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிவிட்டு தங்களது முதல் தலைமுறை பட்டதாரி என்ற முன்னுரிமை சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்

மேலும் மேலாண்மை துறை வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்காமல் விட்டதால் இச்சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

Leave a Comment