Bima Sakhi Yojana Scheme in Tamil : பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 9 அன்று “எல்ஐசி பீமா சகி” திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், பெண்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உருவாக்குவதும், அவர்களுக்கு காப்பீட்டு துறையில் தொழில்முறை வாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும். இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி வழங்கப்படும். மேலும், இந்த பயிற்சியில் சேரும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படும். பாலிசி விற்பனை செய்தால், அதற்கான கமிஷனும் அவர்களுக்கு கிடைக்கும்.
விண்ணப்பிக்க தகுதி
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவார்கள்.
- 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் அருகிலுள்ள எல்ஐசி கிளைக்குச் சென்று அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியுமா?
ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், வயது சான்று, முகவரிச் சான்று, மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் போன்ற ஆவணங்களை முன் தயாராக வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியற்றவர் யார்?
- ஏற்கனவே எல்ஐசி முகவராக அல்லது பணியாளராக இருந்தவர்கள், அவர்களின் கணவன்/மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
- ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியர்கள் அல்லது முன்னாள் முகவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.
சம்பளம் மற்றும் கமிஷன்
- இந்த திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.
- முதல் ஆண்டு: மாதம் ரூ.7,000
- இரண்டாம் ஆண்டு: மாதம் ரூ.6,000
- மூன்றாம் ஆண்டு: மாதம் ரூ.5,000
- பயிற்சி காலத்தில், சம்பளத்துடன் பாலிசி விற்பனைக்கான கமிஷன் மற்றும் சிறந்த செயல்பாடுக்கு போனஸ் வழங்கப்படும்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு
- 2 லட்சம் பெண்களுக்கு ஒரு ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
- முதலாவது கட்டத்தில் 35,000 பெண்கள் எல்ஐசி முகவர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
- மேலும் 50,000 பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- 3 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, பெண்கள் எல்ஐசி முகவர்களாகப் பணியாற்ற முடியும்.
- பட்டம் பெற்ற பெண்களுக்கு டெவலப்மெண்ட் ஆபீசர் ஆக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
Leave a Comment